WhatsApp-ல் வீடியோ அழைப்பு அறிமுகம்
செய்திகள், தொழிநுட்பம்
446 views 0
வாட்ஸ்-ஆப் நிறுவனம், தனது app-ல் வீடியோ அழைப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதியை பயன்படுத்த வாட்ஸ்-ஆப் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்திருக்க வேண்டும்.
வீடியோ அழைப்பை அறிமுகம் செய்துள்ளது பற்றி வாட்ஸ்-ஆப் நிறுவனம், ‘நாங்கள் அறிமுகம் செய்யும் வீடியோ அழைப்பு, அனைத்து வகை ஸ்மார்ட் ஃபோன்களிலும் வேலை செய்யும்படி உருவாக்கி உள்ளோம். விலை குறைந்த ஸ்மார்ட் ஃபோனிலும் வீடியோ காலிங், நன்றாக வேலை செய்யும்படி உருவாக்கியுள்ளோம. இந்தியாவுடன் சேர்த்து, கிட்டத்தட்ட 180 நாடுகளில் வீடியோ அழைப்பு வசதி அறிமுகம் செய்யப்படுகிறது’ என்று கூறியுள்ளது.
இந்தியாவில் வாட்ஸ்ஆப்-ஐ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 16 கோடி பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags செய்திகள்தொழிநுட்பம்
- Previous உங்களுக்கு எது தேவை? முடிவு செய்யும் ஃபேஸ்புக்! #FacebookTimeline
- Next ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்: தொலைதொடர்பில் புரட்சி, அண்ட்ராய்டு லேண்ட்லைன் விரைவில்!!
0 thoughts on “WhatsApp-ல் வீடியோ அழைப்பு அறிமுகம்”