சீனாவுக்கு காணிகளை வழங்குவதற்கு எதிர்ப்பு – அம்பாந்தோட்டையில் வெடிக்கும் போராட்டம்

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.
சீன முதலீட்டாளர்களுக்கு நிலங்களை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று அம்பாந்தோட்டை சித்ரகல சந்தியில் பெருமளவு பொதுமக்கள் ஆர்ப்பாட்டததில் ஈடுபட்டனர்.
அம்பாந்தோட்டை நகரம் மற்றும் துறைமுகத்துக்குச் செல்லும் வீதிகளை மறித்து இவர்கள் நடத்திய போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்னர், நில அளவைத் திணைக்கள அதிகாரிகளும், மாவட்டச் செயலக அதிகாரிகளும் பேரகமவுக்கு சென்றிருந்த போது, அவர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
- Previous இலங்கையில் ஏற்படவுள்ள வான்முட்டும் அதிசயம்! ஆச்சரியத்தில் உலக நாடுகள்
- Next யுவராஜ்சிங்கின் தேனிலவு புகைப்படங்கள்: ஜோடினா இது தாங்க ஜோடி!
0 thoughts on “சீனாவுக்கு காணிகளை வழங்குவதற்கு எதிர்ப்பு – அம்பாந்தோட்டையில் வெடிக்கும் போராட்டம்”