விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் இந்தி நடிகை

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘கருப்பன்’, ‘96’, ‘அநீதி கதைகள்’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை அடுத்து கோகுல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக பல நடிகைகளை தேடிவந்தனர். தற்போது இந்தி நடிகை சாயிஷாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
சாயிஷா இதற்கு முன் ஜெயம் ரவியுடன் இணைந்து ‘வனமகன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து விஜய்சேதுபதியுடன் இணையவுள்ளார். இவர்கள் இணையும் புதிய படத்திற்கு ‘ஜுங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பாரீஸ் நகரில் நடைபெற இருக்கிறது. இதில் சாயிஷா பாரீஸில் பிறந்து, வளர்ந்த பெண்ணாக நடிக்கிறார்.

இதற்குமுன் கோகுல், விஜய் சேதுபதியை வைத்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கியவர். கடைசியாக கார்த்தியை வைத்து ‘காஸ்மோரா’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

0 thoughts on “விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் இந்தி நடிகை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: