இன்று பூமியை நெருங்கும் 3 மைல் அகலம் கொண்ட எரிகல்! – இதனால் என்ன விபரீதம் தெரியுமா

எதிர்வரும் வெள்ளியன்று 3 மைல் அகலம் கொண்ட எரிகல் ஒன்று பூமியை கடந்து செல்லும் என நாசா மையம் அறிவித்துள்ளது.
3122 Florence என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிகல்லானது செப்டம்பர் முதல் திகதி பூமியின் அருகாமையில் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூமியை கடந்து செல்லும் எரிகற்களில் 3122 Florence மிக்கப்பெரியது என கூறப்படுகிறது. குறித்த எரிகல்லானது முதன் முறையாக 1981 ஆம் ஆண்டு ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. இது 1890 ஆம் ஆண்டில் இருந்தே குறிப்பிட்ட கால இடைவெளியில் பூமியை நெருங்கி வந்து கடந்து செல்லும் என நாசா ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறித்த எரிகல்லானது இந்த முறை பூமிக்கு மிகவும் நெருக்கமாக கடந்து செல்வதால் ஆய்வாளர்களுக்கு மேலும் அறிந்து கொள்ள வாய்ப்பு உருவாகும் என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த நிகழ்வால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை என நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செவிலியர் Florence Nightingale என்பவரை ஆதரிக்கும் பொருட்டு குறித்த எரிகல்லிற்கு 3122 Florence என்ற பெயரை சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- Previous தமிழர்களை மஹிந்தவே காப்பாற்றுவார் – சம்பந்தன்
- Next மகளை இரும்பு சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் அப்பா: அதிர வைக்கும் காரணம்
0 thoughts on “இன்று பூமியை நெருங்கும் 3 மைல் அகலம் கொண்ட எரிகல்! – இதனால் என்ன விபரீதம் தெரியுமா”