செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் என்ன பாதிப்பு தெரியுமா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியில் உள்ள அனைத்து நிலப்பரப்புகளையும் மனிதன் கண்டுபிடித்து குடியேறி விட்டான். அடுத்து பூமியை போலவே தட்பவெப்ப நிலை நிலவும் செவ்வாய் கிரகத்தில் மனிதனால் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

எனவே, மனிதனை செவ்வாய் கிரகத்தில் குடியேற வைக்க தீவிர ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆனால், செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவன் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாக கூடும். அங்கு உயிர் வாழ்வது கடினம் என்று ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் உள்ள இயற்பியல் தொழில்நுட்ப கல்வி மையத்தின் பேராசிரியர் எவ்ஜினி நிகாலோங் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்றார் போல் மனிதனின் உடல் அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த ஈர்ப்பு விசைக்கு தகுந்த மாதிரி நோய் எதிர்ப்பு சக்திகளும் உடலில் உருவாகின்றன.

ஆனால், செவ்வாய் கிரகத்தில் ஈர்ப்பு சக்தி வேறு மாதிரி இருக்கும். எனவே, மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி மறைந்து விடும். இதன் மூலம் பல்வேறு நோய்களை எதிர்கொள்ள நேரிடும். மட்டுமின்றி அங்கு வாழ்வதும் கடினம் என அவர் தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஓடத்தில் 6 மாதம் வரை தங்கி இருந்த 18 ரஷ்ய விண்வெளி வீரர்களை ஆய்வு செய்த போது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருந்தது. அடிக்கடி ஜலதோ‌ஷம் பிடித்தது. சாதாரண சூழ்நிலையில் கூட நோய் கிருமி தாக்குதலுக்கு ஆளானார்கள்.

இதே போல்தான் செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் சென்றாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என அந்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

You may also like...

0 thoughts on “செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் என்ன பாதிப்பு தெரியுமா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: