பூமியை 1 லட்சம் தடவை சுற்றி விண்வெளி ஆய்வகம் சாதனை

சர்வதேச விண்வெளி ஆய்வகம் இன்று பூமியை 1 லட்சம் தடவை சுற்றி முடித்து சாதனை படைத்துள்ளது.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து பூமிக்கு மேலே சர்வதேச விண்வெளி ஆய்வகம் கட்டி வருகின்றன. 6 மாதத்துக்கு ஒரு முறை 3 வீரர்கள் சென்று தங்கி அங்கு கட்டுமான பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்த விண்வெளி ஆய்வகம் பூமியில் இருந்து 250 மைல் தூரம் மேலே உள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு முதல் விண்வெளி ஆய்வகம் கட்டுமான பணி தொடங்கி நடந்து வருகிறது. 2000-ம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்கள் சென்று தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இதுவரை அங்கு 220-க்கும் மேற்பட்டோர் சென்று தங்கியுள்ளனர். இந்த நிலையில் சர்வதேச விண்வெளி ஆய்வகம் இன்று பூமியை 1 லட்சம் தடவை சுற்றி முடித்து சாதனை படைத்துள்ளது.

இது 200 கோடியே 60 லட்சம் மைல் தூரம் பயணம் செய்ததற்கு சமமாகும். மேலும் செவ்வாய் கிரகத்துக்கு 10 தடவை சென்று வந்ததற்கு ஒப்பாக கருதப்படுகிறது. நெப்டியுனுக்கு ஒரு தடவை வந்து சென்றதற்கும் சமமாகும்.

இந்த தகவலை அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் சமீபத்தில் 2 அமெரிக்கர்கள், 3 ரஷியர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஒருவர் என 6 பேர் தங்கியிருந்தனர். ஒரு வருடத்தில் அங்கிருந்து 30 லட்சம் போட்டோக்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளனர்.

You may also like...

0 thoughts on “பூமியை 1 லட்சம் தடவை சுற்றி விண்வெளி ஆய்வகம் சாதனை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: