ஆபத்­தின் விளிம்­பில் உல­கம்!

இன்­றைய உலக அர­சி­யல் போக்கு எமது வாழ்­வி­ய­லுக்­கும் சாத­க­பா­தக அம்­சங்­களை தர­வல்­லது. வல்­ல­ரசு நாடு­க­ளின் ஏட்­டிக்­குப் போட்­டி­யான அணு ஆயுத உற்­பத்­தி­க­ளும், பரி­சோ­த­னை­க­ளும் இன்று அபா­ய­க் கட்­டத்தை நெருங்­கி­யுள்­ளன.

வட­கொ­ரி­யா­வின் அடா­வ­டித்­த­னம் நாளுக்­கு­நாள் அதி­க­ரித்­து­வ­ரு­கின்­றது. பொது­வாக உலக பொலிஸ்­கா­ரன் என்ற மம­தை­யில் அமெ­ரிக்­காவே தான்­தோன்­றித்­த­ன­மா­கச் செயற்­பட்டு வந்­தி­ருக்­கின்­றது.

அதி­ச­ய­மாக வட­கொ­ரி­யா­வின் மிரட்­டல் கள், ஆத்தி­ர­மூட்­டும் செயற்­பா­டு­கள் மற்­றும் பேச்­சுக்­களை அமெ­ரிக்கா நம்­ப­மு­டி­யாத பொறு­மை­யு­டன் சகித்து வரு­கி­றது. வட­கொ­ரியா மீதான பொரு­ளா­தா­ரத் தடையை அமெ­ரிக்­கா­வின் கண்­கா­ணிப்­பில் ஐ.நா.சபை­யும் உலக நாடு­கள் சில­வும் நீடித்து வரும் நிலை ஏற்­றுக்­கொள்­ளக் கூடிய ஒன்­றல்­லத்­தான்.

ஆனால் வட கொரி­யத் தலை­வ­ரது இள­மைத் துடிப்பு, போர்­வெ­றி­யைத் தூண்­டு­வ­தாகக் கரு­தி­னா­லும், அவ­ரது ஆட்­சிக்கு எதி­ராக மக்­கள் எது­வும் செய்ய இய­லா­த­வர்­க­ளாக உள்­ள­னர் என்பதே யதார்த்தம், அண்­மை­யில் ஐத­ர­சன் குண்டு நிலக்­கீழ் வெடிப்பு பரி­சோ­தனை ஒன்றை வெற்­றி­க­ர­மா­கச் செய்­த­மையை இட்டு வட­கொ­ரிய மக்­க­ளும் மகிழ்ச்­சிக் கொண்­டாட்­டத்­தில் ஈடு­பட்­டமை அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

உண்­மை­யில் வட­கொ­ரிய மக்­கள் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­குப் பயந்து தான் இவ்­வாறு செயற்­பட்­டார்­களா என்­பது தெரி­ய­வில்லை.

எவ்­வா­றா­யி­னும் வட­கொ­ரியா போர்ப் பிச்சை கேட்­கி­றது என்ற அமெ­ரிக்­கா­வின் சரி­யான கூற்று, அபா­யச் சங்கு ஊதிய நிலை­யில் கொரி­ய­தீ­ப­கற்­பம் அழி­வின் வரவை எதிர்­நோக்­கி­யுள்­ளது என­கருத வைக்கிறது. இவர்களில் எவர் முந்­தி­னா­லும் மிகப் பெ­ரும் பேர­ழிவை உல­கம் எதிர்­கொள்ள நேரி­டும்.

நெருப்­பு­டன் விளை­யா­டு­வது ஒட்­டு­மொத்த உலக இருப்­புக்கும் ஆபத்து என்­பதை உரிய தரப்­பு­கள் உணர்ந்து அமைதி முயற்­சி­களை விரைந்து மேற்­கொள்­ளா­வி­டின், அமெ­ரிக்­கா­வின் ஏவு­க­ணைத் தடுப்பு, பொறி­மு­றை­க­ளைக் கடந்து வட­கொ­ரியா 3ஆம் உல­கப் போரை ஆரம்­பித்­தும் முடித்­தும் வைக்­கும் எனக் கரு­த­வேண்­டி­யுள்­ளது.

You may also like...

0 thoughts on “ஆபத்­தின் விளிம்­பில் உல­கம்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: