கதை இன்றோடு முடிகிறது: 4.9 பில்லியன் மைல்கள் தொலைவில் நாசகர வேகம்!

சூரியக் குடும்பத்திலுள்ள சனி கிரகத்தை ஆய்வு செய்வதற் காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 1997ஆ-ம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி காசினி விண்கலத்தை அனுப்பியது.

இந்த விண்கலம், 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி சனி கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் நுழைந்தது.

அன்று முதல், 12 ஆண்டுகளாக சனி கிரகம், அதன் வளையங்கள், டைட்டன் என பெயரிடப்பட்ட சனி கிரகத்தின் துணைக்கோள் குறித்து,

ஏராளமான நிழற்படங்கள் மற்றும் தகவல்களை காசினி விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது.

சனி கிரகம் மற்றும் அதன் வளையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பல்டி அடித்து ஊடுருவி சாதனை படைத்தது.

இவ்வாறு சனி கிரகத்தின் 22 வளையங்களுக்குள்ளும் பல்டி அடித்து, கடைசியாக இன்று சனி கிரகத்தில் விழுந்து தனது பயணத்தை முடித்துக் கொண்டது.

இதுவரை 4.9 பில்லியன் மைல்கள் பயணித்து, மணிக்கு 1 லட்சத்து 22 ஆயிரம் கி.மீ. வேகத்தில் சனி கோள் வளி மண்டலத்தில் மோதி வெடித்து தனது ஆயுளை முடித்துக்கொண்டது.

காசினியின் இந்த பிரம் மாண்ட இறுதிக்கட்ட பயணத்தை கவுரவிக்கும் வகையில் கூகுள் தேடுபொறி நிறுவனம், சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

You may also like...

0 thoughts on “கதை இன்றோடு முடிகிறது: 4.9 பில்லியன் மைல்கள் தொலைவில் நாசகர வேகம்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: