ஒரே சமயத்தில் 50 பேருடன் வீடியோ சாட்: ஃபேஸ்புக் மெசேஞ்சரில் அறிமுகம்

tamilwil facebook
சொந்தபந்தங்களை விட்டு தொலைதூரங்களில் இருப்பவர்கள் தங்கள் உறவுகளோடு இணைப்பில் இருக்க ஃபேஸ்புக் மெசேஞ்சரில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் வீடியோ சாட் அம்சம் உலகம் முழுக்க ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் கணினி பதிப்புகளிலும் விரைவில் வழங்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 245 மில்லியன் பேர் மெசேஞ்சர் செயலி மூலம் வீடியோ கால் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக க்ரூப் சாட் செய்வோரை முகம் பார்த்து பேசிட புதிய அம்சம் வழி செய்யும்’, என ஃபேஸ்புக் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் ஆறு பேர் வரை க்ரூப் வீடியோ சாட் ஆப்ஷனில் பார்க்க முடியும். இத்துடன் 50 பேர் வரை க்ரூப் சாட் மூலம் குரல்களை கேட்க முடியும். ஆறு பேர் மற்றும் அதற்கும் அதிகமானோர் சாட் செய்யும் போது மற்றவர்களுக்கு ஸ்பீக்கர் ஆப்ஷன் மட்டுமே தெரியும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
இந்த அம்சத்தினை பயன்படுத்த அப்டேட் செய்யப்பட்ட புதிய மெசேஞ்சர் செயலியை இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். வீடியோ க்ரூப் சாட் செய்ய ஏற்கனவே இருக்கும் க்ரூப் அல்லது புதிய க்ரூப் ஒன்றை உருவாக்கி வீடியோ சாட் மேற்கொள்ளலாம்.

You may also like...

0 thoughts on “ஒரே சமயத்தில் 50 பேருடன் வீடியோ சாட்: ஃபேஸ்புக் மெசேஞ்சரில் அறிமுகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: