வெளியானது உலகின் முதல் நிஜ ஏலியன் புகைப்படம்!

உலகின் முதல் நிஜ ஏலியன் என பிரேசில் பொலிசார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பிரேசில் பொலிசார் வெளியிட்ட குறித்த புகைப்படமானது ஏலியன் குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவரும் அமைப்பினர் தங்களின் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

பிரேசிலின் Parque Mitre பகுதியில் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் நடைபெற்றுவருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் நள்ளிரவில் குறித்த உருவத்தை தங்களது மொபைல் போனில் புகைப்படமெடுத்துள்ளனர்.

ஆனால் குறித்த புகைப்படம் புகழ்பெற்ற திரைப்படக் காட்சி போன்று இருப்பதாகவும், இது திருத்தப்பட்ட புகைப்படம் எனவும் சிலர் கருத்துகள வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 13 ஆம் திகதி Parque Mitre பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலிசார் முதலில் குறித்த உருவத்தை கண்டுள்ளனர். உடனடியாக தங்களிடம் இருந்த போனில் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அந்த ஏலியன் உருவத்தின் நீண்ட கைகளில் வெறும் 3 விரல்களே இருந்துள்ளது. வெள்ளை நிறத்தில் இருந்த அந்த உருவம் நல்ல உயரமாக இருந்தது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அச்சம் காரணமாக அந்த உருவத்தை நெருங்காமல் பொலிசார் அங்கிருந்து கடந்து சென்றுள்ளனர். மேலும் அந்த உருவம் அப்பகுதியில் சுற்றித்திரிவதாக இளைஞர்கள் சிலர் மீண்டும் பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

You may also like...

0 thoughts on “வெளியானது உலகின் முதல் நிஜ ஏலியன் புகைப்படம்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: