பொலிஸாரின் மனிதாபிமானம்! ஜீப் வண்டியில் பிறந்த ஆண் குழந்தை – யாழில் சம்பவம் !

பிரசவ வலியால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவருக்கு பொலிஸாரின் ஜீப் வண்டியில் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டையில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (03)  செவ்வாய்கிழமை  காலை வேளையில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து முச்சக்கரவண்டியில் அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லும் வழியில் முச்சக்கரவண்டி பழுதடைந்துள்ளது.இதையடுத்து அப்பகுதியில் வந்து கொண்டிருந்த வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குணதிலக, சம்பவத்தை அறிந்துகொண்டதுடன், தனது பொலிஸ் ஜீப் வண்டியில் குறித்த பெண்ணையும், அவரது கணவரையும் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததுடன், பாதுகாப்பிற்கு இரு பொலிஸாரையும் அனுப்பியுள்ளார்.

எனினும் வைத்தியசாலையை அடைவதற்கு முன்னரே பொலிஸ் ஜீப் வண்டியில் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.குழந்தையும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: