சுவிஸ் பொலிஸாரால் கிளிநொச்சி இளைஞர் சுட்டுக் கொலை

சுவிற்சர்லாந்து நாட்டில் கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற அகதியொருவரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின், டிசினோ மாகாணத்தில் உள்ள Brissago நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொலிஸார் இன்று இரண்டு அகதிகளை அழைத்துக்கொண்டு குடியிருப்பு ஒன்றிற்கு சென்றுள்ளனர்.

அப்போது, வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.

பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது அவர் தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.

நிலைமையை உணர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவாக செயல்பட்டு தாக்குதல்தாரியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் தாக்குதல் மேற்கொண்ட அகதி கரன் எனப்படும் இலங்கையின், கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் என பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முழுமையான விபரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: