வல்வெட்டித் துறையில் இளைய தளபதி விஜய்யின் வேஷ்டி கிழிந்தது!

தீபாவளி தினத்தன்று வெளிவர இருக்கும் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்துக்கான விளம்பரங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன.

விளம்பர பதாதைகள் வழக்கம் போல தமிழகத்திலும் இலங்கையிலும் இன்னுமுள்ள தமிழர் வாழும் இடங்களிலும் கட்டப்பட்டுள்ளன.

அவ்வாறு விஜயின் பிரமாண்டமான பதாதை ஒன்று வல்வெட்டித் துறையில் நேற்று முன் தினம் கட்டப்பட்டது.

ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்ட எழுச்சியின் மையமாக அமைந்த வல்வெட்டித் துறையில், சினிமா நாயகனின் பதாதை கட்டப்பட்டது குறித்த, பல விசனங்கள் சமூக வலைத் தளங்களில் எழுதப்பட்டிருந்தன.

இன் நிலையில் நேற்று இரவு குறித்த பதாதை திட்டமிட்டுக் கிழிக்கப்பட்டிருக்கிறது. பதாதை கிழிக்கப்பட்டிருக்கும் முறையும், கிழித்த இடமும் எதையோ சொல்லாமல் சொல்கிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: