தகாத தொடர்பு! காதலிக்கு முன் உயிரைவிட்ட அவிசாவளை இளைஞன்

தன்னை விட வேறு இளைஞர் ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பது தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை தொடர்ந்து காதலியின் முன்னாள் காதலன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவிசாவளையில் இடம்பெற்றுள்ளது.

அவிசாவளை – கொஸ்கம மிரிஸ்வத்த என்ற பிரதேசத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

15 வயதுடைய பாடசாலை மாணவியை குறித்த இளைஞன் கடந்த 3 மாதகாலமாக காதலித்து வந்துள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் பிறிதொரு இளைஞனுடன் குறித்த மாணவி, தொடர்பு வைத்திருப்பதாக அறிந்த இளைஞன், மாணவியின் வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றார்.

சமரசமாவதற்கு இருவரும் இணங்காததை தொடர்ந்து ஆத்திரத்தில் பொங்கிய இளைஞன், தனது காதலியை கயிற்றினால் கட்டிவிட்டு அவருக்கு முன்பாகவே சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அவிசாவளை – குடகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனும் அந்த மாணவியும் பல தடவைகள் முரண்பட்டுக் கொண்டதாகவும், இதற்கு முன்னரும் அவர் தற்கொலைக்கு முயற்சித்திருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்கின்ற அவிசாவளை பொலிஸார், தற்கொலை இடம்பெற்ற மாணவியின் இல்லத்தில் அவரது உறவினர்கள் இருவர்கூட அண்மையில் தற்கொலை செய்துகொண்டிருந்ததாக தெரிவித்தனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: