விஷம் குடித்தவரை காப்பாற்ற உடனே இதை கொடுங்கள்

விஷத்தை நீக்கும் சிறந்த கிருமி நாசினியாக வசம்பு உதவுகிறது. மருத்துவ குணம் நிறைந்த இந்த வசம்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

வசம்பை கொண்டு விஷத்தை நீக்குவது எப்படி?

வசம்பு பொடியை விஷம் அருந்தியவர்களுக்கு உடனே 2-3 டீஸ்பூன் அளவு கொடுத்தால் அவர்களின் உடலில் உள்ளிருக்கும் விஷம் முழுவதும் வெளியேறிவிடும்.

வசம்பின் மருத்துவ குணங்கள்

வசம்பை நீரில் ஊறவைத்து அதை துவையலாக அரைத்துத் தேனில் கலந்து தினம் 3 வேளை 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி வராது.
சிறிது வெந்தயத்துடன் ஒரு துண்டு வசம்பு போட்டு ஊற வைத்து அதை விழுதாக அரைத்து சாப்பிட்டால் அலர்ஜி குணமாகும்.
வசம்புடன் நீர் தெளித்து மையாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து, உடம்பில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்தால் சரும நோய்கள் நீங்கும்.
வசம்புடன் சிறிது கருப்பட்டி சேர்த்து பொடித்து அதை காலை, மாலை சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சிறிதளவு சீரகத்துடன் வசம்பு சேர்த்து கஷாயம் செய்து பருகி வர வயிற்றுக் கோளாறுகள் சீராகும்.
வசம்பு, மிளகு, சுக்கு ஆகிய மூன்றையும் அரைத்து கஷாயம் செய்து குடித்து வர கை, கால் மூட்டுவலி நீங்கும்.
வசம்பைத் தூளாக்கி தேனில் குழைத்து நாக்கில் தடவி மென்று வர ஆரம்பநிலை திக்குவாய் குணமாகும்.
வசம்பு, புதினா இலை, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து, அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
ஒரு துண்டு வசம்பு, 2 வெள்ளைப் பூண்டு பற்கள் ஆகியவற்றை நசுக்கி அதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, ஆறியதும் காதில் சில துளிகள் விட்டு வர காதுவலி குணமாகும்.
செவ்வாழைப் பழத்துடன் சிறிது வசம்புத் தூளைச் சேர்த்து சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்காகும்.
2 வெற்றிலையுடன் சிறிது வசம்பு வைத்து மென்று தின்று, இரண்டு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்று உப்புசம் குணமாகும்.
வசம்பை தூள் செய்து 2 டீஸ்பூன் அளவு எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான தொற்று நோய்களும் குணமாகும்.
சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமி நாசினியாகவும் பயன்படுத்தலாம்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: