இந்த விஷயத்தில் பெண்கள் ஆதிக்கம் அதிகம்: ஆய்வில் தகவல்

tamileil one
நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதோடு தொலைக்காட்சிகள் மற்றும் இதர ஊடகங்களை விட ஸ்மார்ட்போன்களையே மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதன் படி சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமான நேரம் பெண்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருவதாக மொபைல் மார்க்கெட்டிங் அசோசியேஷன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேமிங், யூடியூப் வீடியோக்கள் என ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இத்துடன் ஆண்களை விட பெண்கள் சுமார் 80 சதவிகிதம் ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016 ஆம் ஆண்டில் பொது மக்களின் ஸ்மார்ட்போன் பயன்பாடு 55 சதவிகிதம் வரை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக தினசரி அடிப்படையில் ஒவ்வொருத்தரும் மூன்று மணி நேரத்திற்கு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில் மெசேஜிங் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகமாகி இருக்கிறது. இத்துடன் ஆன்லைன் ஷாப்பிங் பயன்பாடு கடந்த ஆண்டை விட சுமார் 15 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கிறது. ஆய்வின் தகவலின் படி ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில் ஆன்லைன் ஷாப்பிங் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
மேலும் 85 சதவிகிதம் பீச்சர் போன் பயனாளிகள் ஸ்மார்ட்போன்களுக்கு மாற விரும்பவில்லை என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கின்றது. இத்துடன் ஸ்மார்ட்போன் பயனர்களை விட மொபைல் திட்டங்களுக்கு பீச்சர் போன் பயனாளர்கள் அதிகம் செலவழித்து வருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like...

0 thoughts on “இந்த விஷயத்தில் பெண்கள் ஆதிக்கம் அதிகம்: ஆய்வில் தகவல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: