விஸ்வாசம் படத்தில் அஜீத்துடன் ஜோடி சேரப் போவது யார் தெரியுமோ?…

விஸ்வாசம் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்குமாறு அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை அடுத்து இயக்குனர் சிவா, அஜீத் ஒன்று சேர்ந்துள்ள படம் விஸ்வாசம். இந்த படத்திலும் வி சென்டிமென்ட் தொடர்கிறது.

படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஹீரோயின்
அனுஷ்கா

விஸ்வாசம் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்குமாறு அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அனுஷ்கா ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் அஜீத்துடன் நடித்துள்ளார்.

அஜீத்
இஷ்டம்

அஜீத் ரொம்ப நல்ல மனிதர் என்று அனுஷ்கா தெரிவித்திருந்தார். அஜீத்துடன் நடித்ததில் பெருமிகழ்ச்சி என்று தெரிவித்திருந்த அனுஷ்கா விஸ்வாசம் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று நம்பப்படுகிறது.

சால்ட் அன்ட் பெப்பர்
பிளாக்

வீரம் படத்தில் சால்ட் அன்ட் பெப்பராக இருந்த அஜீத்தின் லுக் விவேகம் படத்தில் வெறும் சால்ட்டாக தான் இருந்தது. இந்நிலையில் அவர் விஸ்வாசம் படத்தில் தலைக்கு கருப்பு டை அடிக்கப் போகிறார்.

ரசிகர்கள்
மகிழ்ச்சி

தல தயவு செய்து சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை விட்டுவிட்டு டை அடிங்க தல என்று ரசிகர்கள் மன்றாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை கைவிட்டது அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: