மிதக்கும் ஸ்பீக்கர்களை அறிமுகப் படுத்துகின்றது LG நிறுவனம்

tamilwil LG நிறுவனம்

அமெரிக்காவில் அடுத்த வாரம் நடக்கவுள்ள இலத்திரனியல் நுகர்வோருக்கான கண்காட்சியில் LG நிறுவனம் மிதக்கும் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்யவுள்ளது.

ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் இலத்திரனியல் நுகர்வோருக்கான சந்தை அறிமுகப்படுத்தல் கண்காட்சிகள் இடம்பெறும்.

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை குறித்த கண்காட்சிகளை லொஸ் வெகாஸ் நகரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த கண்காட்சியின் போது அறிமுகமாகவுள்ள மிதக்கும் ஸ்பீக்கரானது ப்ளுடூத் தொழிநுட்பத்தில் செயற்படக் கூடியதாகவும், இயக்கப்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு லீவியேஷன் ஸ்டேஷன் (leaviation station) எனும் கருவி வழங்கப்படும். அது அதிக காந்த சக்தியை கொண்டு ஸ்பீக்கர்களை சில சென்றி மீற்றர்கள் வரை காற்றில் மிதக்கச் செய்யும்.

இந்த ஸ்பீக்கர்களுக்கு LG pj9 எனப் பெயரிடப்பட்டுள்ளது. அத்தோடு இதற்கு தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கான மின்சாரத்தை சேமித்து வைக்க முடியும் என்பதோடு, leaviation station மூலம் மின்சாரம் வழங்கப்படும் வசதியை இது கொண்டுள்ளது என்பதே குறித்த ஸ்பீக்கர்களின் சிறப்பு எனலாம்.

You may also like...

0 thoughts on “மிதக்கும் ஸ்பீக்கர்களை அறிமுகப் படுத்துகின்றது LG நிறுவனம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: