புத்தாண்டு ராசிபலன் 2018: மேஷம் ராசிக்காரர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்

சென்னை: புத்தாண்டு இன்றும் இரு வாரங்களில் பிறக்கப் போகிறது. 2017ஆம் ஆண்டு முடியப்போகிறது. 2018ஆம் ஆண்டில் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே இந்த புத்தாண்டு ராசி பலன். மேஷ ராசிக்காரர்களுக்கு ஒளிமயமான ஆண்டாக அமையப்போகிறது.

2017ஆம் ஆண்டில் செப்டம்பர் வரை 6 ஆம் இட குருபகவனால் மேஷ ராசிக்காரர்களுக்கு கஷ்டமான சூழ்நிலை நிலவியது. அதே போல அட்டம சனியும் அல்லல்படுத்தியது. உடல்நிலை ஒருபக்கம் வாட்டி வதைக்க,மன உளைச்சல் ஏற்பட்டு படாத பாடு பட்டிருப்பீர்கள்.

2018ஆம் ஆண்டு இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலமாக அமையப் போகிறது. காரணம் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட ராகு கேது பெயர்ச்சி, செப்டம்பர் மாதம் ஏற்பட்ட குருப்பெயர்ச்சி, டிசம்பரில் சனிப்பெயர்ச்சி என கிரக சூழ்நிலைகள் சாதகமாக அமைந்துள்ளது.

பாசத்திற்கும் அன்புக்கும் அடிபணியும் மேஷ ராசிக்காரர்களே! நீங்க பாசத்திற்கு முன்னாடி பனியாக இருந்தாலும் பகை என்று வந்தால் புலியாக மாறி விடுவீர்கள். காரணம் உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான்தான். மனித நேயம் கொண்ட நீங்கள், உடல் உழைப்பில் சூரப்புலி. சாதனையாளராக திகழும் உங்களுக்கு இருந்த கஷ்ட காலம் கடந்த ஆண்டோடு கடந்து விட்டது. 2018 இனி பொற்காலமாக அமையப்போகிறது.

ராசிநாதன் செவ்வாய் பகவானால் தைரியம் அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியத்தில் அயராது பாடுபட்டு முன்னேற்றம் அடைவீர்கள். அட்டம ஸ்தானத்தில் இருந்த சனி பாக்கிய ஸ்தானமான 9ஆம் இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளதால் இனி சிறப்பாக காரியங்கள் நடக்கும். உடல்நலக்கோளாறுகள் நீங்கி மருத்துவ செலவுகள் குறையும்.

2017 ஆம் ஆண்டில் அலுவலகம் செல்வதற்கே அஞ்சிய நீங்கள், இனி ஆசை ஆசையாக அலுவலகம் செல்வீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு பதவி உயர்வோடு, சம்பளமும் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்புகள் கைகூடி வரும். வெளி வட்டார நட்பு சிறப்பாக அமையும்.

பாஸ்போர்ட், விசாவில் இருந்த சிக்கல்கள் தீரும். விமானம், கப்பல்கள் மூலம் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். கை நிறைய பணமும் வரும் என்பதால் குடும்பத்தில் குதூகலமாக அமையும். முன்னோர்கள் சொத்துக்கள் கிடைக்கும்.

ராசிக்கு 4 ஆம் இடமான கடக ராசியில் அமர்ந்துள்ள ராகுபகவானாலும், 10 ஆம் இடமான மகரத்தில் அமர்ந்துள்ள கேது பகவானாலும் சிறுசிறு இடையூறு ஏற்படும். வீடு, வண்டி,பராமரிப்பு செலவு ஏற்படும். ராகுவினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க துர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்லவும். அதே போல கேதுவினால் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க விநாயகர் கோவிலுக்கு செல்லவும்.

2018 அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் குருபகவான் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடமான அட்டம ஸ்தானத்திற்கு வருகிறார். இதனால் சற்று கவனமாக இருக்கவேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது அவசியம். அக்டோபர் குரு பெயர்ச்சியை நினைத்து இப்போதே கவலைப்பட வேண்டாம். 10 மாதம் உற்சாகமாக இருக்கலாம்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை வெற்றி மீது வெற்றி வந்து சேரும். மே முதல் செப்டம்பர் வரை சீராக அமைப்பும். சாதனை படைக்கலாம். 2018ஆம் ஆண்டை உற்சாகத்துடன் ஆரம்பிப்பீர்கள். எல்லா முடிவுகளையும் தைரியமாக எடுப்பீர்கள். வெளிநாட்டு பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். அதிகாலையில் சூரிய பகவானை வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.

 

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: