ஒரு ஓட்டுநர், பல வாகனங்கள்!

நெடுஞ்சாலைப் பயணத்துக்கு மட்டுமே பொருந்தும் ஒரே ஓட்டுநரால் இயக்கப்படும் பல வாகனத் தொடர்  அதாவது ‘டிராக் ப்லாடூன்’ தொழில்நுட்பத்தில், வாகனங்கள் அனைத்தும் ஒரே சீரான வேகத்தில் செல்ல முடியும். வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி ஒரே அளவாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், 20 சதவிகிதம் வரை எரிபொருள் சேமிக்கப்படுமாம். வைஃபை எனப்படும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் மற்ற வாகனங்கள் இணைக்கப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது. வைஃபை, ஸ்டீரிங் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுக்குத் தேவையான சில கருவிகளைப் பொருத்திவிட்டால், எந்தவொரு காரும், ப்லாடூன் வாகனத் தொடரில் இணைய முடியும். ஒரே நேரத்தில் பல வாகனத் தொடர்கள் ஒரே சாலையில் செல்வதும், ஒரு வாகனத் தொடரில் செல்லும் கார், மற்றொரு வாகனத் தொடருக்கு மாறுவதும் இந்த தொழில்நுட்பம் மூலம் சாத்தியம்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: