நெற்றியில் விழும் சுருக்கங்களை மறையச் செய்வது எப்படி?

நம்மில் நிறைய பேருக்கு வரிகள் போல சுருக்கங்கள் ஏற்படும். இதற்கு நிறைய காரணங்கள் உண்டு.

வயதாவது ஒரு காரணம். அதை தவிர்த்து இளம் வயதிலேயே சிலருக்கு சுருக்கங்கள் வளரும்.

மென்மையான சருமம் பெற்றிருந்தால், அடிக்கடி நெற்றியை சுருக்குவதால் இது போன்று கோடுகள் உருவாகும். பின்னர் அது அப்படியே நிலைத்திடும்.

இதனை கடைகளில் விற்கும் க்ரீம்களை கொண்டு நீக்க முயற்சித்தால் சுருக்கங்கள் அதிகமாகிவிடும். நம் வீட்டிலேயே எளிய முறையில் இந்த சுருக்கத்தை போக்கிவிடலாம்.

அதற்கு தேவை மூன்று பொருட்கள்.

வாழைப்பழம்

தேன்

மற்றும்

தயிர்

இந்த மூன்றும் சேர்ந்த கலவை நெற்றியில் விழும் விடாப்படியான சுருக்கங்களையும் மறைக்க வைக்கும் ஆற்றல் கொண்டுள்ளவை. அவைகளில் உள்ள தேவையான சத்துக்கள் சருமத்திற்கு போஷாக்கு தருகின்றன. இவற்றைக் கொண்டு எப்படி நெற்றியின் சுருக்கங்களை போக்குவது என பார்க்கலாம்.

தேவையானவை : வாழைப்பழம் – 1 தயிர் – 2 டேபிள் ஸ்பூன் தேன் – 1டேபிள் ஸ்பூன்

வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் தயிர் ஆகியவற்றை கலந்து நெற்றியில் பேக் போல் போடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 2- 3 முறை செய்தால் விரைவில் நெற்றியில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் மறைந்து, அழகான பிறை போன்ற நெற்றியை பெறுவீர்கள்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: