2.0 படத்திற்கு ஆப்பு வச்ச ஷங்கர்? இது ஹாலிவுட் ஸ்டைலாம்!

வழக்கான தமிழ் படங்களின் ஓடும் நேரத்தை விட 2.0 படத்தின் ஓடும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எந்திரன் படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோரது நடிப்பில் உருவான படம் 2.0. இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் முடிந்துள்ளது. ஆனால், 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாக இருப்பதல் அதற்கான பணியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த தீபாவளிக்கே படத்தை வெளியிட படக்குழு நினைத்திருந்தது. ஆனால், பணிகள் முழுமை அடையாததால், படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை.

மேலும், அடுத்தாண்டு குடியரசுத் தினத்தை முன்னிட்டு படம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கோடை விடுமுறையையொட்டி படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் கிராஃபிக்ஸ், வி.எஃப்.எக்ஸ் ஆகிய பணிகள் ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இதற்கிடையில், ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் 2.0 படம் ஓடும் நேரம் 100 நிமிடம் மட்டும் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும், ஹாலிவுட் படங்கள் 100 நிமிடங்கள் மட்டுமே உருவாக்கப்படும். 2.0 படத்தை ஹாலிவுட்டிலும் வெளியிட திட்டமிட்டுள்ளதால், வழக்கமான தமிழ்ப்படங்களின் நேரத்தை விட குறைவாக முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும், ரஜினியின் படங்களுக்கு ஓடும் நேரம் குறைக்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: