உலகை அதிர வைத்த பறக்கும் குழந்தை

மனவளர்ச்சி குன்றிய தனது இரண்டு வயது மகன், பல்வேறு வகையான உயரங்களில் அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை, தந்தையொருவர் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இவ்வாறு படங்களில் காட்சியளிக்கும் குழந்தைக்கு பறக்கும் சக்தியுண்டு என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எலன் லோரன்ஸ் என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .  இது எந்தளவுக்கு உண்மையானது என்றும் தெரியாதிருப்பினும் இவருடைய மகனுக்கு 18 மாதங்கள் நிறைவடைந்தவுடனேயே, இவ்வாறான புகைப்படங்களை வெளியிடுவதற்கு அவர் ஆர்வம்காட்டி வந்துள்ளார்.

தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள படங்களில், வில் என்று அழைக்கப்படும் புகைப்படவியலாளரின் மகன், கலிபோர்னியாவிலுள்ள கோல்டன் கேட் பாலம் மற்றும் அங்குள்ள தேசிய பூங்கா போன்ற இடங்களில், குறித்தவொரு உயரத்தில் அந்தரத்தில் பறந்துகொண்டிருப்பதை போன்ற படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனது மகனுக்கு குறையுண்டு என்னும் அதே நேரத்தில், அவன் எங்களுக்கொரு ஆசீர்வாதமாக பிறந்துள்ளான் என்றும் எனது மகன் மனவளர்ச்சி குன்றியவனாக இருந்தாலும் அவனுக்கு ஒரு சக்தியுண்டு என்றும் வில்லின் தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படங்களை கண்டுள்ள கலை இயக்குநரொருவர், இந்த புகைப்படங்களை கொண்டு 2016ஆம் ஆண்டுக்கான நாட்காட்டிகளை தாயாரித்து, இதை போன்று மனவளர்ச்சி குன்றிய பாடசாலைகளின் வருமானத்துக்காக நன்கொடையாக கொடுப்பதற்கு  முடிவு செய்துள்ளார் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தெரிவித்துள்ளார்.

 

You may also like...

0 thoughts on “உலகை அதிர வைத்த பறக்கும் குழந்தை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: