மனைவியை வெட்டி சமைத்த கொடூர கணவன்!

மெக்சிகோவில் மனைவியை கணவன் கொடூரமாக வெட்டி கொலை செய்து சமைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் Guerrero மாகாணத்தில் உள்ள Taxco பகுதியைச் சேர்ந்தவர் Magdalena Aguilar Romero(28).

இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான இவர் கடந்த 13-ஆம் திகதி தன்னுடைய குழந்தைகளை அழைத்து வருவதற்காக முன்னாள் கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார், அதன் பின் வீடு திரும்பவே இல்லை.

இதனால் காணமல் போன இவரை பொலிசார் தேடிவந்த நிலையில், இவர் முன்னாள் கணவரான Arciniega வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கொலை செய்யப்பட்ட இவர் உடலின் பாகங்கள் சமைக்கப்பட்டிருந்தன, அதுமட்டுமின்றி சில பாகங்கள் குளிர்சாதானப் பெட்டியின் பிளாஸ்டிக் பையில் இருந்துள்ளன.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, இந்த கொடூர செயலை செய்திருப்பது பெண்ணின் முன்னாள் கணவனாகத் தான் இருக்கும் என்று சந்தேகிப்பதாகவும், அவரை தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மெக்சிகோவில் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுகளாக பெண்கள் கொலை செய்யப்படுவதாக அதிகமாகியிருப்பதாகவும், இந்த கொலை எதற்காக செய்யப்பட்டது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை எனவும் விசாரணைக்கு பின்னரே முழு தகவலும் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: