வடகொரிய ஜனாதிபதியின் சகோதரரின் கொலை தொடர்பில் முக்கிய தகவல்!

வடகொரிய ஜனாதிபாதி கிங் ஜாங் உன்னின் சகோதரர் கிங் ஜாங் நம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி மலேசிய விமான நிலையத்தில் வைத்து மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

ரசாயன தாக்குதலே அவரின் இறப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இந்தோநேசியாவை சேர்ந்த சிடி ஐஸ்யா மற்றும் வியட்னாமை சேர்ந்த டோன் ஹவுங் என்ற இரண்டு பெண்களை பொலிசார் கைது செய்தனர்.

கிங் ஜாங் நம்மின் கொலை குறித்து தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் வடகொரிய அரசுதான் அவரை கொலை செய்ததாக பலராலும் ஊகிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட கிங் ஜாங் நம் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அமெரிக்கர் ஒருவரை மலேசியாவின் Langkawi பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சந்தித்து பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் அந்த மர்ப நபரின் அடையாளங்கள் எதுவும் தெரியாத நிலையில் அவர் உளவாளியா என்பதும் தெரியவில்லை. இருப்பினும் அவர் யார் என்பது பற்றிய விசாரணை நடைபெறும் என நம்பப்படுகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: