மகளின் காதலனை நடுரோட்டில் ஆணவப் படுகொலை செய்த பெற்றோர்

டெல்லியில் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக அப்பெண்ணின் குடும்பமே இளைஞனை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த அங்கிட்(வயது 23), புகைப்பட கலைஞராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

அங்கிட் இந்து என்பதால், நிஷாவின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதையும்மீறி இருவரும் காதலித்து வந்த நிலையில் ஆத்திரமடைந்த நிஷாவின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் டெல்லியில் அங்கிட்டை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இச்சம்பவத்தை பார்த்தவர்கள் அங்கிட்டின் தாயிடம் கூற, கத்திக் கொண்டே ஓடிவந்துள்ளார். சம்பவ இடத்திலிருந்து நிஷாவின் தாய், தந்தை, மாமா மற்றும் தப்பித்து ஓடிவிட்டனர்.

ரத்தவெள்ளத்தில் கிடந்த மகனை பார்த்து கதறியுள்ளார், தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தனிர்.

நிஷாவின் தாய், தந்தை மற்றும் மாமா ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவான நிஷாவின் தம்பியை தேடி வருகின்றனர்.

டெல்லியில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: