ஜெயலலிதா வழிபட்ட கோவிலில் கஞ்சா செடி வளர்ப்பு: வெளியான பகீர் தகவல்

ஜெயலலிதா வழிபட்டு வந்த காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் மூர்த்தி என்பவர் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரியவந்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து வழிபட்டு வந்த கோவில்களில் காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலும் ஒன்று.

வழக்குகளில் சிக்கும் முக்கிய பிரபலங்கள் பலரும் இந்த ஆலயத்துக்கு வந்து செல்வது வழக்கம்.

அவ்வாறு காஞ்சிபுரத்தின் பிரபல கோவிலாக விளங்கிய வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் பொலிசார் நடத்திய விசாரணையில் மூர்த்தி என்பவர் கோவில் வளாகத்தில் கஞ்சா விதைகளை தூவி அந்த செடிகளை வளர்த்து வந்ததை உறுதிசெய்த பொலிசார், குறித்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

முக்கிய பிரமுகர்கள் பலரும் வழிபட்டு செல்லும் அந்த கோவிலில் கஞ்சா செடி இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: