மொபைல்போன் பயன்படுத்துவோரில் 80 சதவீதம் பேர் ஆவலை தூண்டும் வலைத்தளம்

இந்தியாவில் மொபைல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு குடும்பத்தில் அனைவருமே ஆளுக்கு ஒரு செல்போன் வைத்திருக்கிறார்கள். ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் போட்டி காரணமாக மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் விலை குறைந்ததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆன்ட்ராய்டு மொபைல்போனில் இன்டர்நெட் இணைப்பு கொடுத்து கூகுள், யூ டியூப், உள்ளிட்ட பல்வேறு இணைய தளங்களை பயன்படுத்தலாம் என்பதால் இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவராலும் இணையதளங்கள் முன்பை விட அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்க செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சலுகைகள் வழங்கி வருகிறது. ஒரு நேரத்தில் மாதத்துக்கு 1 ஜி.பி. இன்டர்நெட் வழங்கி வந்த நிறுவனங்கள் தற்போது குறைந்த பட்சம் தினம் 1 ஜி.பி. முதல் 1½ ஜி.பி. என டேட்டாவை மலிவாக வழங்கி வருகின்றன.

இந்தியாவில் மொபைல் போனில் இன்டர்நெட் மூலம் இணைய தளங்களை தேடுவோர் பற்றிய ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் செல்போன் பயன்படுத்துவோரில் 80 சதவீதம் பேர் யூடியூப் இணைய தளத்தை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘யூ டியூப்’ல் சினிமா, பாடல்கள், டி.வி. நிகழ்ச்சிகள், டி.வி. தொடர்கள், பேட்டிகள், இசை நிகழ்ச்சிகள் என பல்வேறு விதங்களில் வீடியோக்கள் விதவிதமாக கொட்டிக் கிடக்கிறது. இது தவிர நடிகர், நடிகைகள் பற்றிய அந்தரங்கங்களும் அதிகமாக வீடியோவாக உலா வருகிறது.

இந்தியாவில் யூடியூப் சேவை 2008-ம் ஆண்டு கிடைத்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் யூடியூப் முதல் இடத்தை பிடித்துள்ளது. 22½ கோடி பேர் யூ டியூப்பில் நுழைந்து நிகழ்ச்சிகளை தேடுகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: