கோடி கணக்கான பணத்தினை இழந்து கோபுரத்தில் இருந்து குடிசைக்கு சென்றவர்கள்!

இகி பட்டிஸ்டா

EBX குரூப் சேர்மேனான இவரும் உச்சபட்ச சொத்து மதிப்பு ரூ.2,28,357 கோடியாக இருந்தது. 2014 ஆம் ஆண்டுவாக்கில் இவரின் கடன் மதிப்பு ரூ.6500 கோடி!

பெர்னார்ட் மடோப்

பங்குச்சந்தை தரகரான இவர் அதிகபட்சமாக ரூ.1,10,849 கோடிக்கு அதிபதியாக இருந்தார். 2009ல் மடோப் மற்றும் அவர் மனைவியின் மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 839கோடி. சட்டத்திற்குப் புறம்பாக ரூ.4,21,494 கோடியை முதலீடு செய்ததால்,இவரின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பேட்ரீசியா குளுக்

தொழில்முனைவோரான இவரின் உச்சபட்ச சொத்து மதிப்பு ரூ.42,387 கோடி. 2011-ம் ஆண்டுவாக்கில் குளுக்கின் கடன்மதிப்பு ரூ.2,92,231 கோடி. தவறான முதலீடுகளால் பல கோடிகள் கடன் ஏற்பட்டதால், திவாலானதாக அறிவிக்கக் கோரியிருக்கிறார் குளுக்.

எலிசபெத் ஹோல்ம்ஸ்

தெரனோஸ் நிறுவனத்தின் சி.ஈ.ஓ-வான இவரின் சொத்துமதிப்பு ஒருகட்டத்தில் 29,349கோடியாக இருந்தது. 2015ல் இவருக்குச் சொத்து எதுவுமே இல்லை என மதிப்பிட்டுள்ளது போர்ப்ஸ் பத்திரிக்கை. குறைந்த விலையில் இரத்த பரிசோதனை செய்து மருத்துவப் பரிசோதனையில் புரட்சி ஏற்படுத்தியதாகக் கூறிய இவரின் தெரனோஸ் நிறுவனத்தின் மீது பல்வேறு மோசடி புகார்களும் சட்ட நடவடிக்கைகளும் எழுந்ததால், ஹோல்ம்ஸ் தனது அத்திணை சொத்தையும் இழந்தார்.

அப்ரே மெக்ளென்டன்

அமெரிக்கன் எனர்ஜி பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் சி.ஈ.ஓ-வான இவரின் அதிகபட்ச சொத்து மதிப்பு ரூ.19,581 கோடி. 2016ல் மெக்ளென்டன் இறக்கும் போது ரூ.3,254 அற்ப பணத்தை வைத்திருந்தார். வடமேற்கு ஒக்லகாமாவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் ஏலத்தில் சதி செய்ததாக, மெக்ளென்டன் மீது கூட்டாச்சி நீதிபதியால் குற்றம் சாட்டப்பட்டது.

ஏலன் ஸ்டேன்போர்டு

ஸ்டேன்போர்டு பைனான்சியல் குரூப்பின் சி.ஈ.ஓ-ஆன இவருக்கு ரூ.13,060கோடி சொத்து இருந்தது. தற்போது இவருக்கு எந்தச் சொத்துமில்லை. சட்டத்திற்குப் புறம்பான முதலீடுகள் மற்றும் மோசடிகளால் தண்டிக்கப்பட்டு ரூ.38,394 கோடி அபராதம் விதிக்கப்பட்டதால் தனது அனைத்து பணத்தையும் இழந்தார் ஸ்டேன்போர்டு.

வின்சென்ட் கென்னடி மெக்மொகன்

WWE ன் சி.ஈ.ஓவான இவரின் உச்ச சொத்து மதிப்பு ரூ.11,685 கோடியாக இருந்தது. 2014 ஆண்டுவாக்கில் இவரின் மொத்த சொத்து ரூ.4883 கோடி தான். ஒரு தொழில் ஒப்பந்தத்தால் தனது 30% சொத்துக்களை இழந்தார் வின்சென்ட்.

பிஜூகுல்பர் குட்மட்சன்

வெஸ்ட் ஹேம் யூனைட்டேட் எப்.சி யின் முன்னாள் முதலாளியான இவரின் உச்சபட்ச சொத்து மதிப்பு ரூ.7,182கோடி. 2008ல் இவரிடம் எதுவும் இல்லை என மதிப்பிட்டுள்ளது போர்ப்ஸ். ரூ.6,25,128 கோடி கடனால், ஐஸ்லாண்டிக் நீதிமன்றத்தால் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளார் குட்மட்சன்.

ஆல்பெர்ட்டோ விளார்

முதலீட்டு வங்கியாளரான இவர், ஒரு காலத்தில் ரூ.6,194 கோடிக்கு அதிபதி. ஆனால் தற்போது இவரிடம் ஒன்றுமில்லை. 2008ல் பண மோசடி, முதலீட்டு ஆலோசனை மோசடி, பத்திர மோசடி, அஞ்சல் மோசடி போன்றவற்றிற்காகக் குற்றம்சாட்டப்பட்டார் விளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: