மஹிந்தவின் தலைமையில் குருணாகலில் கூட்டம்?

சுதந்திர தினமன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் குருணாகலில் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் முற்போக்கு முன்னணி என்ற அமைப்பினால் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குருணாகல் மல்லவபிட்டிய தாகொடபிட்டிய பகுதியில் இரவு 8.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களான சாலிந்த திஸாநாயக்க, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

முஸ்லிம் முற்போக்கு முன்னணியுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புக்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சர்தார் இந்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்

You may also like...

0 thoughts on “மஹிந்தவின் தலைமையில் குருணாகலில் கூட்டம்?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: