மருமகளை கொலை செய்தது ஏன்? மாமனார் பரபரப்பு வாக்குமூலம்

இந்தியாவில் மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மாமனாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை சேர்ந்தவர் ரத்தன் சிங். இவர் மனைவி சுலீந்தர் கவுர்.

தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த எட்டு மாதங்களாக இத்தாலியில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தங்களது மகனின் மனைவியான அனிதாவை ரத்தனும், சுலீந்தரும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் அனிதாவை ரத்தன் கோபத்தில் அடித்துள்ளார்.

இதையடுத்து ஏன் என்னை அடிக்கிறீர்கள் என அனிதா மாமனாரான ரத்தனிடம் கேள்வி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரத்தன் தன்னிடமிருந்த துப்பாக்கியால் அனிதாவை சுட்டு கொலை செய்துள்ளார்.

இதற்கு அங்கிருந்த ரத்தனின் மனைவி சுலீந்தரும் உதவி செய்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் ரத்தவெள்ளத்தில் கிடந்த அனிதாவின் சடலத்தை கைப்பற்றி விட்டு ரத்தனையும், சுலீந்தரையும் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து ரத்தனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பணம் கேட்டு அடிக்கடி மருமகளை கொடுமைப்படுத்தி வந்ததை அவர் ஒப்பு கொண்டுள்ளார்.

மேலும், அவரை கொல்ல ஏற்கனவே திட்டம் போட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: