காதல் கணவரின் லீலையால் தூக்கில் தொங்கிய பிரபலம்.!

திரையுலக பிரபலங்களாக இருந்தாலும் வாழ்க்கையில் அவர்களும் பல்வேறு சோகங்களையும் துயரங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது, இதனை சமாளிக்க முடியாமல் பலர் தங்களுடைய உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

இந்நிலையில் தற்போதும் பிரபல தெலுங்கு தொகுப்பாளியும் செய்தி வாசிப்பாளருமான தேஜஸ்வனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேஜஸ்வனி ஐ.டி ஊழியரான பவன் குமார் என்பவரை காதலித்து இரு வீட்டாரின் கடும் எதிர்ப்புகளையும் தாண்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்து வந்ததால் திருமணத்திற்கு பிறகு துபாயில் வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் இந்தியா திரும்பிய இவர்கள் பவன் குமாரின் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பவன் குமார் வேறொரு பெண்ணுடன் மறைமுகமாக தொடர்பு வைத்து கொண்டுள்ளார்.

இதனை அறிந்த தேஜஸ்வனி மனமுடைந்து தன்னுடைய அறையில் சென்று கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கியுள்ளார். ரூமிற்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அவரது மாமியார் அக்கம் பக்கத்தாரின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த போலீசார் வாக்குமூல கடிதத்தின் மூலம் பவன் குமாரை விசாரணை செய்து வருகின்றனர். தொகுப்பாளி தேஜஸ்வனியின் மரணம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: