பத்து நிமிட விசாரணை: பிரித்தானிய பயங்கரவாதிகளுக்கு கூட்டாக தூக்கு தண்டனை!

பிரித்தானியாவில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ஈராக்கில் போரட சென்ற கைதிகள் பலருக்கு விசாரணை ஏதுமின்றி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்ய கூட்டுப்படைகளுடன் இணைந்து ஈராக் மற்றும் சிரியா ராணுவத்தினர் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்கிய நிலையில், பலர் கைதிகளாகவும் சிக்கியுள்ளனர். இவர்களுக்கான விசாரணையானது தொடர்ந்து ஈராக் மற்றும் சிரியா நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது.

அதில் தற்போது பிரித்தானியர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு ஈராக் நீதிமன்றம் விசாரணை ஏதுமின்றி தூக்கு தண்டனை வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்தே இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தாலும், இதற்கு ஈராக் பிரதமரின் அதிரடி நடவடிக்கைகளும் காரணமாக கூறப்படுகிறது.

கடந்த வியாழனன்று 13 கைதிகளும் வெறும் 10 நிமிட விசாரணைக்கு பின்னர் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி மேலும் பல கைதிகள் விசாரணையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், மிக விரைவில் விசாரணை துவங்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: