சுவிஸ் சாலையில் ஆபாச நடனமாடிய பெண்ணால் பரபரப்பு

சுவிட்சர்லாந்தின் St. Gallen மாகாணத்தில் பரபரப்பான சாலை ஒன்றில் மது போதையில் பெண் ஒருவர் ஆபாச நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

St. Gallen மாகாணத்தில் உள்ள Rheineck பகுதியில் கடந்த வெள்ளியன்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

சுமார் 33 வயது மதிக்கத்தக்க அந்த பெண்மணி அரைகுறை ஆடையுடன் சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தை அப்போது அங்கே கூடியிருந்த மக்கள் புகைப்படம் எடுக்கவும், வீடியோவாக பதிவு செய்யவும் செய்தனர்.

சிலர் கூச்சலிட்டு அவரை உற்சாகப்படுத்தியுள்ளனர். அவர் ஏன் இவ்வாறு நடந்துகொண்டார் என்ற தகவல் வெளியாகவில்லை.

சாலையில் உள்ள மக்களின் கவனத்தை தான்பக்கம் திருப்புவதிலேயே அவரது நடவடிக்கை இருந்துள்ளது.

இதனிடையே இரவு 9.30 மணியளவில் மாகாண பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் விரைவாக வந்து குறித்த பெண்மணியை மீட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்று சேரும்போது குறித்த பெண்மணி உள்ளாடையுடன் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது உடைகளை மீண்டும் உடுக்க வைத்து அவரை அவரது குடியிருப்புக்கு அனுப்ப உதவியுள்ளனர்.

அவர் மீது எந்த குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: