புதிய சாதனை படைத்த லசித் மலிங்க..!

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் லசித் மலிங்க பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் வகையில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மலிங்க விளையாடி வருகிறார்.

இன்று நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 278 ஓட்டங்களை பெற்றுள்ளது. இந்த போட்டியில் மலிங்க 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

அதற்கமைய சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் மொத்தமாக 500 விக்கெட்களை வீழ்த்தி அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: