இங்கிலாந்திற்கு எதிராக 336 ரன்கள் குவித்தது இலங்கை அணி:

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரோசன் சில்வாவின் பொறுமையான ஆட்டத்தால் இலங்கை அணி 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை வகித்தது.

இரண்டாவது போட்டியில் வெற்றி பெரும் முனைப்புடன் களமிறங்கிய இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 290 ரன்கள் கொடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இலங்கை அணி ஆட்டம் ஆரம்பித்த சில மணி நேரங்களில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சி கொடுத்தது.

ஒரு பக்கம் வீரர்கள் அனைவரும் திணற, நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இலங்கையின் ரோசன் சில்வா, தனது பங்களிப்பாக 85 ரன்கள் எடுத்து அணியை 336 ரன்களுக்கு எடுத்துச்செல்ல உதவினார். இதனால் இலங்கை அணி இங்கிலாந்தை விட 46 ரன்கள் அதிகபட்சமாக எடுத்து முன்னிலை பெற்றது.

பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு 6 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், இரண்டால் நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: