நீதிமன்றில் சரணடைந்த ரௌடிக்கு விளக்கமறியல்!

ஆவா ரௌடிக்கும்பலின் தலைவனான அசோக் என்ற ரௌடியை பதின்னான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த அசோக், இன்று சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் முன்னிலையானான்.

சட்டத்தரணி கீர்த்தனா ரௌடி சார்பில் முன்னிலையானார்

முந்தைய செய்தி: நீண்டகாலமாக பொலிசாருக்கு தண்ணீர் காட்டிய யாழ் பிரபல ரௌடிக்காக வாசலில் காத்திருக்கும் பொலிசார்!

ஆவா ரௌடிக்கும்பலின் தலைவனான அசோக் என்ற ரௌடி இன்று சட்டத்தரணி ஊடாக மல்லாகம் நீதிமன்றில் சரணடைந்துள்ளான்.

பயங்கர ரௌடியான அசோக் மீது மல்லாகம் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுன்னாகம், மானிப்பாய், யாழ்ப்பாண பொலிசாரால் இவன் வலைவீசி தேடப்பட்டு வரும் பயங்கர ரௌடியாவான். வழக்குகளில் முன்னிலையாகாததையடுத்து, அவன் மீது பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், அவனை பொலிசாரால் நெருங்கவே முடியவில்லை. நீண்டகாலமாக பொலிசாருக்கு தண்ணீர் காட்டி வந்தான்.

இந்த நிலையில் ரௌடி அசோக், சட்டத்தரணி ஊடாக இன்று மல்லாகம் நீதிமன்றில் சரணடைந்தான்.

தேடப்பட்டு வரும் ரௌடி மல்லாகம் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து, அவனை நீதிமன்ற வாசலில் வைத்தே அமுக்க சுன்னாகம் பொலிசார் நீதிமன்றத்திற்கு வெளியில் காத்திருக்கின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: