இந்தியாவில் கள்ளக்காதலுக்கு உதவியவருக்கு வந்த சோகம்

இந்திய செய்திகள்:சென்னையில் கள்ளக்காதல் என்று தெரியாமல் நண்பனின் கள்ளக்காதலுக்கு உதவிய நபருக்கு தர்ம அடி விழுந்துள்ளது.

வாணியம்பாடியை சேர்ந்த பிலால் என்ற வாலிபர் பெங்களூருவில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்தபோது அங்கு வந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.

இந்நிலையில் இருவரும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டனர். அந்த பெண் தன் வீட்டில் இருந்த நகைகளையும் எடுத்துவந்துவிட்டார். பிலால் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தன் நண்பரான வகுஸ்ஸானை சந்தித்து தாங்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், வீட்டில் இருந்து ஓடி வந்ததாகவும் கூறினார்.

முதலில் அதிர்ச்சியச்சிடைந்த வகுஸ்ஸான், பின்னர் நண்பரின் காதலுக்கு உதவ வேண்டும் என நினைத்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.

இதனிடையே தங்கள் பெண்ணை காணவில்லை என ஓடிவந்த அந்த பெண்ணின் உறவினர்கள் பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெங்களூர் போலீஸ் செல்போன் எண்னை வைத்து பிலால் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்னைக்கு வந்து அரும்பாக்கம் போலீஸாரிடம் விஷயத்தை கூறினர்.

அரும்பாக்கம் போலீஸார் பிலாலின் நண்பரான வகுஸ்ஸானை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அங்கிருந்த அந்த பெண்ணின் உறவினர்கள், வகுஸ்ஸானுக்கு தர்ம அடி கொடுத்தனர். பிறகுதான் வகுஸ்ஸானுக்கு தெரிந்தது, தன் நண்பன் கூட்டி வந்தது அவரது காதலியை அல்ல, வேறு ஒருவரின் மனைவியென்று. கொடுமை என்னவென்றால் பிலாலுக்கே அந்த பெண் திருமணமாவர் என்பது தெரியாதாம்.

நண்பரின் காதலுக்கு உதவப் போய் தர்ம அடி வாங்கியதும் அல்லாமல், போலீஸார் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: