பெண்கள் காப்பகத்தில் 9ஆண்டுகளாக பாலியல் தொல்லை பெண் கர்ப்பம்

இந்திய செய்திகள்:திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிபட்டு பகுதியில் தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் 47 சிறுமிகள் தங்கியிருந்தனர். கலெக்டர் கந்தசாமி கடந்த 17-ந் தேதி திடீர் ஆய்வு நடத்தினார். சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்பதால், அங்கிருந்த மாணவிளை பெரும்பாகத்தில் உள்ள காப்பகத்துக்கு மாற்ற உத்தரவிட்டார்.

பின்னர் இந்த சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை அதிகாரிகளிடையே தெரிவித்தனர்.

இதையடுத்து காப்பக உரிமையாளர் லூபன்குமார், அவரது மனைவி மெர்சிராணி, உறவினர் மணவாளன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காப்பகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது.

இந்த காப்பகத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமிகள் அனைத்து மகளிர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.

நான் தாய், தந்தையை இழந்த நிலையில் இந்த காப்பகத்தில் சேர்க்கப்பட்டேன். எனக்கு தற்போது 16 வயதாகிறது.

காப்பபத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல நரக வேதனையை அனுபவித்து வந்தேன். வெளியில் சொல்ல எந்த உறவுகளும் இல்லை. காப்பகத்துக்கு வந்து பார்த்து செல்ல சொந்தங்களும் இல்லை என்று கதறி அழுதபடி தெரிவித்துள்ளார்.

அவர்கள் சொல்வதை கேட்கவில்லை என்பதற்காக 9ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டனர். காப்பகத்துக்கு சொந்தமான பசு மாடுகளை மேய்க்க வைத்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

இந்த காப்பகத்தில் குறிப்பிட்ட 3 மாணவிகள் அதிக ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு தனி அறை ஒதுக்கி கொடுத்துள்ளனர்.

அந்த 3 சிறுமிகளுக்கும் பெற்றோர் இல்லை கேட்க ஆள் இல்லாததால் அவர்களிடம் காப்பக நிர்வாகிகள் பயங்கரமாக தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: