மட்டக்களப்பு பொலிஸார் சுட்டுக் கொலையில் சீசீரிவி கமரா பரிசோதனை

கொழும்பில் இருந்து அவசரமாக மட்டக்களப்பிற்கு வருகை தந்த பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிசார், விஷேட அதிரடிப்படை, புலனாய்வு அதிகாரிகள் துரித விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமெனவும் பணித்தார்.

அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு சென்ற பொலிஸ்மாதிபர் பூஜித ஜயசுந்தர கொல்லப்பட்ட இரு பொலிசாரின் சடலங்களையும் பார்வையிட்டதுடன் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளையும் அழைத்து முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் மீது இனந் தெரியாத நபர்களால் விடியற்காலை நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு பொலீசார் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளதுடன் பொலிஸ்மா அதிபரின் வருகை நடைபெற்ற சம்பவம் குறித்த பின்னணி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுத்தி உள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையில் உள்ள சீசீரிவி கமரா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதனால் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 பேர் வீதியில் கதைத்து நின்றுள்ளார்கள்.

இவர்களை உனடியாக கண்டு பிடித்து துரித விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளார்கள். இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூன்றுபேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட ஒருவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று காலை கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார்

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்வதற்கு பொலிஸார் இடையூறு வழங்கியதனால் பழிவாங்குவதற்காக இக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என கருதி விசாரணைகள் நடைபெற்று வருகின்றது .

நேற்று மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார் இவருடன் பணியாற்றியவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இவருடன் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரும் பணியாரியதாக கூறி நேற்று அவரை கைது செய்வதற்காக கிளிநொச்சிப் பொலிஸ் விசேட குழு ஒன்று தேடுதல் மேற்கொண்டு வந்த நிலையில் அவர் இன்று காலை கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்

சரணடைந்தவர் முன்னாள் போராளியான வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் (வயது 48) என்பவர் என கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதன் பின்னர் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: