கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு நவீன உணர்வகற்றும் இயந்திரம்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு நவீன உணர்வகற்றும் இயந்திரம் ஒன்று மத்திய சுகாதார அமைச்சினால் நேற்றைய தினம் 30) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சையின்போது நோயாளர்களை மயக்க நிலையில் பேணுவதற்கு உதவும் நவீன உணர்வகற்றும் இயந்திரம் (யுநௌவாநளயை றழசமளவயவழைn) ஒன்று கொழும்பு சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையின் நீண்டகால அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த உணர்வகற்றும் இயந்திரம் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட இருபது இலட்சம் ரூபா பெறுதியான இந்த நவீன இயந்திரத்தின் உதவியுடன் சத்திரசிகிச்சைகளின்போது மேற்கொள்ளப்படும் உணர்விழப்புச் சிகிச்சை வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும் எனத் தெரியவருகிறது.

அண்மையில் புதிதாகக் கடமையைப் பொறுப்பேற்ற கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் மத்திய சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் வைத்தியசாலையின் அத்தியாவசிய அவசர தேவைகள் தொடர்பாகத் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் தொடர்ந்து இந்த இயந்திரத்தைத் தற்போது அவசரமாக அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: