ஓடும் பஸ்ஸில் சுய இன்பம் கண்ட நபர்… புகைப்படமாக எடுத்து வெளியிட்ட பெண்

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது ஒரு பக்கம் இருக்க. சிலர் பெண்களை பொதுஇடங்களில் அசிங்கமாக தொடுவது, பேசுவது போன்ற கீழ்தரமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் சென்னை பேருந்தில் நபர் ஒருவர் சுய இன்பம் அனுபதித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

சென்னை எம்.டி.சி பேருந்தில் இரு தினங்களுக்கு முன் 29-11-2018 மதியம் 1.30 மணியளவில் கூட்ட நெரிசல் இல்லாத பேருந்தில் அந்த கேவலமான நபர் பொதுவெளி என்றும் கூட பாராது இருக்கையில் அமர்ந்தவாறு சுய இன்பம் கண்டிருக்கிறார்.

இதனை அருகில் இருந்த பெண் படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“நான் எப்போதும் போல கேளம்பாக்கம் – சோழிங்கநல்லூர் செல்லும் பி 19 பேருந்தில் ஏறினேன். எனக்கு ஜன்னல் அருகே சீட்டில் பயணிப்பது மிகவும் பிடித்தமானது. பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியாக வெடிக்கப் பார்த்துக் கொண்டும், பாட்டுக் கொண்டே பயணித்து வந்தேன்.

பார்வை!

என் இருக்கையின் எதிர்முனையில் ஜன்னல் அருகே இருக்கையில் அந்த நபர் எப்போது வந்து அமர்ந்தார், அவர் எங்கே ஏறினார் என்றெல்லாம் நான் கவனிக்கவே இல்லை. நான் எதற்சையாக திரும்பி பார்த்த போது, அந்த ஆண் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தேன். ஒரு பெண்ணாக இருப்பதால், இப்படியான பார்வையை நான் தினந்தோறும் கடந்து வருகிறேன். அதனால், அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கேவலமான செயல்..

சற்று நேரம் கழித்து ஏதோ தவறாக நடப்பது போன்ற எண்ணம். திரும்பி பார்த்தால்… வெட்ட வெளிச்சத்தில் ஓடும் பேருந்தில் அந்த ஆண் மிக கேவலமான செயலில் ஈடுபட்டு வந்தார். எனக்கு அங்க என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று அறியாமல், அந்நபரின் செயலை வீடியோவாக பதிவு செய்தேன்.

பதட்டம்!

அந்த செயலை கண்டத்தில் இருந்து பதட்டம் பற்றிக் கொண்டது. என்னால் எதுவும் செய்ய இயலாது நிலை. பயத்தில் பேருந்தின் முன் இருக்கைக்கு சென்று அமர்ந்தேன். பேருந்தில் இருந்து இறங்கிய சில நொடிகளில் அந்த ஆண், மாயமாகிவிட்டார். சில நிமிடங்கள் கழித்து தான்., நான் அவனை சும்மா விட்டிருக்க கூடாது, கத்தி, திட்டி இருக்க வேண்டும், இல்லை கண்டக்டர் இடமாவது கூறி இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.

சின்மயி!

பேருந்தில் பயணித்த அந்த இளம்பெண், நடந்த நிகழ்வை பாடகி சின்மயிடம் அனுப்ப, அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இதை அப்டேட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வர, வர பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மிக கொடூரமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: