எதிர்க்கட்சிகளுடன் கைக்கோர்த்தார் பொரிஸ் ஜோன்சன்!

பிரெக்சிற் விவகாரத்தில் பிரதமர் தெரேசா மே மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் செயற்பாட்டில், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் எதிர்க்கட்சிகளுடன் இணைந்துக் கொண்டுள்ளார்.

அதன்படி, பிரெக்சிற் ஒப்பந்தம் தொடர்பான முழுமையான சட்ட ஆலோசனையை வெளியிடுமாறு முன்னாள் அமைச்சரும் அழுத்தம் பிரயோகித்துள்ளார்.

டெலிகிராஃப் நாளிதழுக்கு அவர் வழங்கும் வாராந்த பத்தியிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”பிரெக்சிற் ஒப்பந்தம் தொடர்பில் சட்டமா அதிபரினால் பிரதமருக்கு வழங்கப்பட்ட சட்ட ஆலோசனைகளை அறிந்துக் கொள்வதற்கு பொதுமக்களுக்கும் உரிமை உண்டு.

இவ் ஒப்பந்தத்தின் முழுமையான சட்ட உட்குறிப்புகளை பொதுமக்கள் அறிந்துக் கொள்வதற்கு தடுக்கப்படுவதானது அசாதாரணமானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மே-யின் பிரெக்சிற் மூலோபாயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொரிஸ் ஜோன்சன் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: