பிரித்தானியாவின் உறுதிப்பாடு மற்றும் திறன்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்…

.

பிரித்தானியாவின் உறுதிப்பாடு மற்றும் திறன்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் என ரஷ்யாவையும் பிற எதிர்ப்பு நாடுகளுக்கும் MI6 இன் தலைவர் அலெக்ஸ் யங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நான்காவது தலைமுறை உளவுத்துறையை உருவாக்குவது குறித்து சென் அண்ட்ரூஸ் பல்கலைக்கழக மாணவர்களிடையே விவரித்த அவர் பிரித்தானியாவுடன் நிரந்தர மோதல் நிலையிலிருக்கும் எதிர்ப்பு நாடுகளின் அச்சுறுத்தல்கள் குறித்தும் எச்சரித்துள்ளார்.

இன்று பல்கலைக்கழக மாணவர்களிடையே நிகழ்த்திய உரையின்போது ரஷ்யாவோ அல்லது எம்மை எதிர்க்கும் பிற நாடுகளோ எங்களது உறுதிப்பாடு, திறன்கள் மற்றும் எமது நட்பு நாடுகளின் செயல்திறனையும் குறித்து மதிப்பிடக்கூடாது என தெரிவித்துள்ளார்.

சைபர் தாக்குதல்கள் மற்றும் தவறான தகவலை பரப்புதல் போன்ற வழிகளில் பிரித்தானியாவைத் தாக்குபவர்களை எதிர்ப்பதற்குத் தேவையான உத்திகள் தம்மிடம் உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

MI6 இல் பன்முகத்தன்மையை பேணுவதற்கும் ஒரு வித்தியாசத்தை உருவாக்குவதற்கும் மாணவர்கள் முன்வரவேண்டுமெனவும் அலெக்ஸ் யங்கர் மாணவர்களிடம் கோரிக்கைவிடுத்தார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: