04-12-2018 தினப்பலன் – இன்று இந்த ராசிக்காரர்கள் அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம்Iதக்ஷிணாயணம் Iசரத்ருதுIகார்த்திகை 18Iஇங்கிலீஷ்: 04 December 2018 I செவ்வாய்க்கிழமை

துவாதசி பகல் 1.42 மணி வரை. பின் த்ரயோதசி Iசுவாதி மறு நாள் காலை 4.33 மணி வரை. பின் விசாகம்

ஷோபனம் நாமயோகம் I தைதுலம் கரணம் Iசித்த யோகம்

தியாஜ்ஜியம்: 9.47 Iஅகசு: 28.31I நேத்ரம்: 0 I ஜீவன்: ½ Iவிருச்சிக லக்ன இருப்பு: 7.12 I சூர்ய உதயம்: 6.20

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30 Iஎமகண்டம்: காலை 9.00 – 10.30Iகுளிகை: மதியம் 12.00 – 1.30I சூலம்: வடக்குI பரிகாரம்: பால்

குறிப்பு:இன்று சமநோக்கு நாள்Iசுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்Iஆராதனை வழிபாடு செய்ய நன்று

திதி: திரயோதசி Iசந்திராஷ்டமம்: ரேவதி

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்…

மேஷம்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

ரிஷபம்:

இன்று வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்:

இன்று கலைத்துறையினருக்கு டென்ஷன் உண்டாகலாம். உடன் இருப்பவர்களிடம் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.

கடகம்:

இன்று எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அரசியல்துறையினர் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.

சிம்மம்:

இன்று அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும்.

கன்னி:

இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

துலாம்:

இன்று மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

விருச்சிகம்:

இன்று கூட்டு வியாபாரம் திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்தி கரமாக இருக்கும். மேலிடத்தின் கனிவான அனுசரனையால் சந்தோஷம் கொள்வீர்கள்

தனுசு:

இன்று குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

மகரம்:

இன்று வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சுபநிகழ்வுகளில் இருந்த தடைகள் நீங்கும்.

கும்பம்:

இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

இன்று அடுத்தவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அரசியல் துறையினருக்கு மேலிடத்திற்கும் உங்களுக்கும் திடீர் இடைவெளி ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும்.

நீலம், பச்சை

2, 7

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: