தேர்தல் முறையாக நடக்கவேண்டும்!

பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டுமானால் முதலில் சட்ட ரீதியான அரசாங்கம் ஒன்றை அமைத்து பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்க வேண்டும். அரசியலமைப்பின் படியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் என்று கூறிக் கொண்ட அனைவரும் அரசியலமைப்பின் படி செயற்படுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம். அரசியலமைப்புப் படி செயற்படுவதாகவே நாம் சத்தியப் பிரமாணம் செய்துள்ளோம். அனைத்து கட்சிகளும் இணக்கத்துக்கு வரும் போது தேர்தலை நடத்துவதென்றால், ஐக்கிய தேசிய முன்னணியும் அதற்கு தயாராக இருக்கின்றது.

முதலில் சட்ட ரீதியான அரசாங்கம் இருந்தால் மாத்திரமே தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.” அந்த வகையில் அரசியலமைப்பை பின்பற்றி அரசியலமைப்பின் ஊடாகவே தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: