மஹிந்தவை சிறையில் அடைக்காத பாவத்தையே தற்போது அனுபவிக்கிறார்! ரணில் விக்ரமசிங்க

கடந்த 2015 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காத பாவத்தையே தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நாட்டு நிலைமை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அன்று மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரை சிறையில் அடைந்திருந்தால் இன்று நாடும் நாட்டின் அரசியலும் நிலையாக இருக்கும்.

இவற்றை செய்யாதமையின் காரணமாகவே அவர்கள் தற்போது எவ்வித கட்டளைகளையும் பின்பற்றாமல் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என கூறினார்.

தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யவேண்டுமே அன்றி அட்டூழியம் செய்து ஆட்சியை பிடிக்க முற்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: