கிருஷ்ணகிரி அருகே பனைமரத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி;

கிருஷ்ணகிரி அருகே பனைமரம் ஏறும் தொழிலாளி மரத்திலேயே உயிர் விட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியை அடுத்த கஞ்சனூர் நாடார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது58) பனை மரம் ஏறும் தொழிலாளி. இன்று காலை 6 மணிக்கு பனை மரத்தில் ஏறினார்.

மரத்தின் உச்சியில் இருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மரத்திலேயே பிணமாக தொங்கி விட்டார்.

தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மரத்தில் ஏறி பிணத்தை மீட்டு கொண்டு வந்தனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: