இலங்கை இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சூரிய கதிரின் தாக்கம் (40°C)

 

இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சூரிய கதிரின் தாக்கம் (40°C) நேரடியாக இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளை தாக்குவதால் பகல் 12. 00 முதல் 3. 00 வரை வெளியே நடமாட்டத்தினை நன்றாக குறையுங்கள்.

ஒரு நாளைக்கு 03 லீற்றர் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். மாமிச உணவுகளை தவிர்த்து மரக்கறி மற்றும் பழங்கள் சேர்ந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

குளிர்ந்த நீரில் அடிக்கடி உடம்பை கழுவுங்கள்.வீட்டின் உட்புற வெப்பநிலையினை குறைப்பதற்கான நடவடிக்கையினை எடுங்கள்.

இவற்றை தொடராத விடத்து உடலுறுப்புக்களின் செயலிழப்பு திடீர் மயக்கம் மற்றும் மரணத்தினையும் ஏற்படுத்தலாம்.

மக்களே அவதானம்: பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் !

மே மாதம் வரை கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரவுள்ளதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவிவருவதாக வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வீசும் காற்றின் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் இடைப்பருவப்பெயர்ச்சி மழையில் ஏற்பட்டுள்ள தாமதம் ஆகியன காரணமாகவே நாட்டின் வெப்பநிலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

காலநிலையில் ஏற்பட்டிருக்கும் இத்திடீர் மாற்றம் காரணமாக இலங்கையைச் சூழவுள்ள கடலும் வழமையிலும் அதிகமான வெப்பநிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் கொழும்பு மற்றும் அதனை அண்டிய வான்வெளியில் உயர் அடுக்கில் வீசும் காற்றில் போதுமான ஈரப்பதன் இல்லாமையினாலும் மேகங்கள் உருவாகும் நிலை தடுக்கப்பட்டுள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

You may also like...

0 thoughts on “இலங்கை இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சூரிய கதிரின் தாக்கம் (40°C)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: