திண்டுக்கல் அருகே பாடம் நடத்துவதாக கூறி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது ..!

திண்டுக்கல் அருகே பாடம் நடத்துவதாக கூறி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் அருகே கலிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் பிசியோதெரபிஸ்ட். இவர் தனது உறவினரின் 15 வயது மகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார். மேலும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் மன உளைச்சலில் இருந்ததால் அவரது தாயார் இது குறித்து விசாரித்துள்ளார். அப்போது மாணவி, தங்கவேல் பலாத்காரம் செய்ததை தாயிடம் கண்ணீர் விட்டு அழுது கூறியுள்ளார்.

இதனால் அதிர்சியடைந்த அவரது தாயார் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தங்கவேல் சிறுமியை பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: